காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மழை வேண்டி மகாகாளேஷ்வர் கோயிலில் முதல்வர் சௌகான் வழிபாடு! 

மாநிலத்தில் நல்ல மழை வேண்டி உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வழிபாடு மேற்கொண்டார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:41 pm IST

மாநிலத்தில் நல்ல மழை வேண்டி உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வழிபாடு மேற்கொண்டார். 

மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி மகாருத்ர பூஜை நடத்தப்பட்டதாகவும், கோயிலில் சுமார் 66 அர்ச்சகர்கள் இணைந்து மந்திர உச்சாடனங்களை ஜெபித்ததாகவும் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராம் பூஜாரி கூறினார். 

முதல்வர் சௌஹான் மாகாகாளேஷ்வரரின் கருவறையில் சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பூஜைகளில் பங்கேற்றார். சிவபெருமானை வழிப்பட்ட பிறகு முதல்வர் சௌஹான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

மாநிலத்தில் மழை குறைவாக பெய்து வருவதால், வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மகாகாளேஷ்வரரை மனதார வழிபட்டேன். 

எல்லோரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

அந்தந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் என்ன பாரம்பரியம் இருந்தாலும், தங்கள் மரபுகளைப் பின்பற்றி மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேலும், மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகின்றது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் தேவையின்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.