மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பாதுகாப்பை மீறி... முதல்வர் விஜய்யின் வாகன அணியில் புகுந்த தொண்டர்!

முதல்வர் விஜய்யின் வாகன அணியில் தொண்டர் புகுந்தது பற்றி...

News image

முதல்வர் விஜய்யின் வாகன அணியில் புகுந்த தொண்டர் - tndipr

Updated On :10 ஜூலை 2026, 1:31 pm IST

கரூரில் பாதுகாப்பை மீறி முதல்வர் ஜோசப் விஜய்யின் வாகன அணியில் புகுந்த தவெக தொண்டரால் பதற்றம் ஏற்பட்டது.

முதல்வரான பிறகு முதல்வர் விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார்.

இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் சென்றார்.

கரூர் செல்லும் வழியில் ஆங்காங்கே தவெகவினரும், மக்களும் கூடி முதல்வர் விஜய்யின் கார் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

திருச்சியிலிருந்து கரூர் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆங்காங்கே காரை மெதுவாக இயக்கி, மக்களின் வரவேற்பை முதல்வர் ஏற்றார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் வாகன அணிக்குள் பாதுகாப்பை மீறி, தொண்டர் திடீரென்று உள்ளே நுழைந்ததால் பதற்றம் நிலவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடனடியாக தவெக தொண்டரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர்.

Summary

Breaching security... a party worker infiltrated Chief Minister Vijay's convoy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.