6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்க்கரை விலை உயர்வு!

கடந்த 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் ஒரு மெட்ரிக் டன் சர்க்கரை விலை 3% அதிகரித்து ரூ.37,760-ஆக விற்பனையாகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் ஒரு மெட்ரிக் டன் சர்க்கரை விலை 3% அதிகரித்து ரூ.37,760-ஆக விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளை சர்க்கரை விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் சர்க்கரை விலை அதிகரித்து காணப்பட்டாலும், சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது விலை சற்று குறைவாகவே உள்ளது. இது சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது 38% குறைவாகும். 

இந்தியாவில் கரும்பு விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் பருவமழை குறைந்ததாலும் இருப்பு குறைந்ததாலும் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் பங்குச்சந்தை ஏற்ற இறக்க நிலவரப்படி சர்க்கரை விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com