சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஒரே நாடு, ஒரே தோ்தல்: தில்லியில் இன்று முதல் கூட்டம்!

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2023, 10:44 am

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அதிகாரபூர்வ முதல் கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை(செப். 1) மத்திய அரசு உத்தரவிட்டது. 

ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதம் முதலே தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிகாரபூர்வமாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில் குழுவில் 8 பேர் அறிவிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் தலைமையில்  மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அதிகாரபூர்வ முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் ராம்நாத் கோவிந்தின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப். 3) மத்திய சட்ட அமைச்சக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.