அயோத்தி ராமர் கோயில் கட்ட 1,600 தொழிலாளர்கள்! புதிய கட்டுமானப் படங்கள்!!
அனைத்துத் துறைகளிலும் சேர்த்து 550 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது 1600-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை 550-லிருந்து 1,600-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத தொடக்கத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்காக ராமர் கோயில் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில், இன்னும் 3 மாதங்களே உள்ளதால், தற்போது தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமா் கோயிலின் கருவறை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்கு (தைப் பொங்கல்) பின்னா் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய்யும் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் ராமர் கோயிலைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அனைத்துத் துறைகளிலும் சேர்த்து 550 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது 1600-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலின் கீழ் தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்படுகிறது. ஐந்து 'மண்டபங்கள்' அமைக்கப்படுகிறது. புனித யாத்திரை வசதி மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆய்வு மையம், ஆடிட்டோரியம், கால்நடை கொட்டகை, நிர்வாக கட்டிடம் மற்றும் பூசாரிகளுக்கான அறைகள் இதில் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...