மணிப்பூரின் ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் கக்சிங் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
தௌபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், விஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பூகாக்சாவ் இகாயில் பாதுகாப்புத் தடைகளை மீறிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் பெரும்பாலும் பெண்கள் ஆவர்.
சட்டம் ஒழுங்கு மீறல்களைக் கருத்தில்கொண்டு கடந்த செவ்வாயன்று 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அவசரமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.