சந்திரபாபு நாயுடு கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: பவன் கல்யாண் கண்டனம்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, சந்திரபாபு நாயுடுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது காவல்துறையின் பொறுப்பு.
இதில் ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்கள் எந்த வகையில் கவலைப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ஆந்திர முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...