ராஜஸ்தான்: மின்னல் பாய்ந்ததில் ஒருவர் பலி; 5 பேர் காயம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சுற்றுலாப் பயணிகள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சுற்றுலாப் பயணிகள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியா, பாரத் இரண்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவை: ராகுல் காந்தி
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தாவது: ராஜஸ்தானில் உள்ள பிம் சாகர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் 5 பேர் உள்பட மொத்தம் ஆறு பேர் இன்று சென்றுள்ளனர். அப்போது மின்னல் பாய்ந்ததில் ஹரிசங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பரன் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு அணையை சுற்றிப் பார்க்க சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மின்னல் பாய்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...