
ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதற்கு இந்தியாவின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்துள்ளனர்.
ஜி-20 மாநாடு நேற்றும் (செப்டம்பர் 9) , நேற்று முன் தினமும் (செப்டம்பர் 10) இந்தியாவில் நடத்தப்பட்டது. உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டதால் தலைநகர் தில்லி விழாக்கோலமாக காட்சியளித்தது. வண்ண விளக்குகளால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர், பிரான்ஸ் அதிபர் எனப் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இணைப்பு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதற்கு இந்தியாவின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து, சுரேஷ் ரெய்னா, ரவி சாஸ்திரி மற்றும் பவானி தேவி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ள பதிவுகள் பின்வருமாறு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.