
ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கோத்ரா பாணியில் மற்றொரு மதகலவர சம்பவம் தூண்டப்படும் ஆபத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தின் ஜல்கானில் சிவசேனை (உத்தவ் பிரிவு) தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:
"2024-ல் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவின் போது மதகலவர சம்பவம் நடக்கும் ஆபத்துள்ளது. எனவே, கோத்ரா பாணியில் மற்றொரு வன்முறை சம்பவம் நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஏராளமான மக்கள் கூட்டத்தை அரசு அழைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், அவர்கள் திரும்பும் பயணத்தில், கோத்ராவில் நடந்ததைப் போன்ற மற்றொரு சம்பவம் தூண்டப்படலாம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், 2024 ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படலாம்" என்று தாக்கரே கூறினார்.
மேலும், "மாநிலத்தில் பாஜகவுடன் கைகோர்க்க சில தவளைகள் மறுபக்கம் தாவுகின்றன" என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கேலியாக தாக்கரே பேசினார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அந்த மாநிலத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.