நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதனால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், '2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 52% ஆக இருந்த டீசல் வாகனங்கள் தற்போது 18% ஆக குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறை இப்போது வளர்ந்து வருவதால் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது. டீசல் வாகனங்கள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவதால் அவற்றின் உற்பத்தி குறைக்கப்பட வேண்டும். எனவே டீசல் கார்களுக்கு மாசுபாட்டு வரியாக 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சருக்கு நான் பரிந்துரைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

வலங்கைமான் புறவழிச்சாலை பணி தொடக்கம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

