ஹிமாசலில் கனமழை பாதிப்பு: ரூ.5 கோடி நிவாரணம் வழங்கிய நிதிஷ்!

ஹிமாசலப் பிரதேசத்தில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.5 கோடி வழங்கியுள்ளார். 
ஹிமாசலில் கனமழை பாதிப்பு: ரூ.5 கோடி நிவாரணம் வழங்கிய நிதிஷ்!

ஹிமாசலப் பிரதேசத்தில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.5 கோடி வழங்கியுள்ளார். 

ஹிமாசலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பருவமழை பல்வேறு பாதிப்புகளையும், சேதத்தையும் விளைவித்துள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 270 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 

மாநிலத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 165 நிலச்சரிவுகள் மற்றும் 72 திடீர் வெள்ளப்பெருக்குகள் பதிவாகியுள்ளன. 

பருவமழையால் மாநிலத்தில் இதுவரை 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் சுகு வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் சுக்விந்தருக்கு நிதிஷ்குமார் எழுதிய கடிதம், 

ஹிமாசலில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். 

கனமழையால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடியை அனுப்புகிறேன்.

ஹிமாசல முதல்வரின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் மக்கள் இழப்புகளிலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com