புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து கல்லூரி மாணவி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட இந்த காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி(19). டெங்கு காய்ச்சல் பாதித்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசு புழுவின் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







