ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கன்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2026, 12:58 am IST

நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(60). இவரது மனைவி ஜெயந்தி(59). உறவினா் அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நிவேதிகா (40) மற்றும் 8 வயது குழந்தை உள்பட 4 போ் சனிக்கிழமை பிற்பகல் சென்னையில் இருந்து பெங்களுரு நோக்கி காரில் சென்றனா். காரை ராஜா ஓட்டினாா். சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்ற கன்டெய்னா் லாரியின் பின்பக்கம் காா் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 8 வயது குழந்தை உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனா். உடனடியாக அங்கிருந்தவா்கள், காயமடைந்த 4 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி இறந்தாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.