
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பணியிலிருந்த காவல் துணை ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆங்கோமாங் என்ற துணை காவலர் மர்ம நபர்களால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்.12ல் காங்போக்பி மாவட்டத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியினர் 3 போ் உயிரிழந்தனர்.
மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலை மாவட்டங்களில் அதிகம் வாழும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
மாநில மக்கள்தொகையில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே மோதலுக்கு பிரதான காரணமாகும்.
மாநிலத்தில் நீடித்து வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா். ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.