சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அவரின் மகன் நாரா லோகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.


சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அவரின் மகன் நாரா லோகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு நல்ல மனிதர் என்றும், தைரியமாக இருக்குமாறும் அவரின் மகனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
ஊழல் புகாரில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மகன் நாரா லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார்.

நாரா லோகேஷ்
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சந்திரபாபு நாயுடுவை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபுவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயவாடா அருகே அமைந்துள்ள ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாததைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீர் கோரப்பட்டது. வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி கோரப்பட்டது. இதனை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...