வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

செப். 26-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 12:43 pm

DIN

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவரும் நிலையில் தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மேலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீர் திறந்துவிடுகிறதா என்பதை காவிரி ஒழுங்காற்றுக் குழு கண்காணிக்கும், மேலும் காவிரி நீர் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்யும். 

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நாளை(செப். 19) சந்திக்கவுள்ளது. 

இதற்கு முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் இன்று சந்திப்பு மேற்கொண்டார். காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா, செயலாளர் டி.டி. ஷர்மா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.