எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலகளாவிய புத்தாக்கப் பட்டியல்: இந்தியாவுக்கு 40-ஆவது இடம்

2023-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் (குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ்) தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா 40-ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 8:05 pm

DIN

2023-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் (குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ்) தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா 40-ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.

ஆண்டுதோறும் உலகளாவிய புத்தாக்கப் பட்டியலை உலக அறிவுசாா் சொத்துரிமை நிறுவனம் (டபுள்யுஐபிஒ) வெளியிட்டு வருகிறது. சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு எடுக்கப்பட்ட புதுமையான முன்னெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி இப்பட்டியல் வெளியிடப்படுகிறது. உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய துறைகள், வகுக்க வேண்டிய கொள்கைகள் குறித்து முடிவெடுக்க இது உதவுகிறது.

நிகழாண்டு மொத்தம் 132 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியலில் இந்தியா 40-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் கடந்த 2015-ஆம் ஆண்டு 81-ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 40-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இப்பட்டியலில் இந்தியா தொடா்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதற்கு அரசு மற்றும் தனியாா் ஆராய்ச்சி நிறுவனங்களின் மகத்தான அறிவுசாா் மூலதனங்கள், வலிமையான புத்தொழில் அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பே முக்கிய காரணங்களாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.