எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல்

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 8:18 pm

DIN

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அவரது ஒப்புதல் பெற்றவுடன் இந்த மசோதா சட்டமாகும்.

மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேறியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.