
இலங்கையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
இலங்கையில் கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துவ்ரும் நிலையில், இந்தாண்டு இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 இறப்புகள் பதிவாகியுள்ளன.
படிக்க: வணங்கான் படத்தில் மிஷ்கின்
நாட்டின் மேற்கு மாகாணத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 47 அதிக ஆபத்து உள்ள பகுதிகளை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு பணிகளை சுகாதார அமைச்சகம் செய்து வருகிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு 76,000 பேருக்கு டெங்கு பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...