தில்லி சேவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எம்.பி ராகுலுக்கு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றியை தெரிவித்துள்ளார்.
தில்லி நிர்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தில்லி நிர்வாக திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 102 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தில்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததற்காக கார்கே, ராகுலுக்கு "தில்லியில் உள்ள 2 கோடி மக்களின் சார்பாக" நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



