இந்தியா கூட்டணி: மும்பை கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை? - 10 முக்கிய தகவல்கள்!

இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் மும்பையில் செப். 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கூட்டணியின் லச்சினை வெளியீடு மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 
இந்தியா கூட்டணி: மும்பை கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை? - 10 முக்கிய தகவல்கள்!
Published on
Updated on
2 min read

இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் மும்பையில் செப். 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கூட்டணியின் லச்சினை வெளியீடு மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியின் பெயரில் ஒன்றிணைந்துள்ளன.

26 எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூனில் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் நடைபெற்றது.

தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்.1 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

மும்பை கூட்டம் தொடர்பான முக்கிய தகவல்கள் 

மும்பையில் பிரம்மாண்ட கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ளவிருக்கிறார். 

தற்போது 26 கட்சிகள் உள்ள நிலையில் மேலும் சில மாநிலக் கட்சிகள் இணையும் என்று கூட்டணியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 4 முதல் 5 கட்சிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. 

கூட்டணியின் லச்சினை செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் செப்டம்பர் 1 பிற்பகல் 3.30 மணியளவில் முடிந்து பின்னர் கூட்டணித் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.

இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சி மும்பை கூட்டத்தை நடத்துகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியா தெரிவித்தார். வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வார்கள் என்றும் கூறினார். 

அதுபோல இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுகான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக, தொகுதி பங்கீட்டில் கட்சிகளுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை என்று காங்கிரஸின் நானா படேல் தெரிவித்தார். 

இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் அதேநாளில், மகாராஷ்டிர பாஜக கூட்டணி கூட்டமும் மும்பையில் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் தரப்பு மற்றும் கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் கலந்துகொள்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com