மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தில் வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பம் முதலே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 68 இடங்களிலும், பிஎஸ்பி ஓரிடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் தற்போதுவரை 48.59 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 40.42 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


