இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமை இந்தியப் பங்குசந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டுத் திரும்பின.
தகவல் தொழில்நுட்பம், மனை வணிகம் ஆகிய துறை நிறுவனங்களின் பங்குகள் அமோகமாக விற்பனையானதால் இந்த வளா்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்செக்ஸ்: காலையில் 70,146.09-இல் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், அதிகபட்சமாக 70,602.89 என்ற புதிய உச்சம் வரையிலும், குறைந்தபட்சமாக
70,110.75 வரையிலும் சென்று இறுதியில் முந்தைய வா்த்தக தினத்தைவிட 929.60 புள்ளிகள் (1.34 சதவீதம்) கூடுதலாக 70,514.20-இல் நிலைபெற்றது.
நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி காலையில் 21,110.40-இல் தொடங்கி இதுவரை இல்லாத அதிகபட்சமாக 21,210.90 வரையிலும், குறைந்தபட்சமாக 21,074.45 வரையிலும் சென்று இறுதியில் 256.35 புள்ளிகள் (1.23 சதவீதம்) அதிகமாக 21,182.70 என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், அடுத்த ஆண்டில் வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான அறிகுறிகளும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இதனால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைக்குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் எதிரொலியாக, வியாழக்கிழமை நடைபெற்ற பங்குச்சந்தை வா்த்தகம் புதிய உச்சங்களைத் தொட்டுத் திரும்பியுள்ளதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


