மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள 'அகாரா' பகுதிக்கு புதன்கிழமை காலை சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள 'அகாரா' பகுதிக்கு புதன்கிழமை காலை சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார். 

இதனைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற போவதில்லை என பஜ்ரங் புனியா தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள 'அகாரா' பகுதிக்கு புதன்கிழமை காலை சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.

இது தொடர்பாக ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஹரியாணா காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது, காந்தி அதிகாலையில் சாரா கிராமத்தில் உள்ள "வீரேந்திர அகாரா"-க்கு வருகை தந்தார். 

பின்னர் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களுடன் உரையாடினார் என தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சர்ச்சைகளுக்கிடையே,  மல்யுத்த வீரர்களுடனான ராகுல் காந்தியின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com