கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அசாமில் இரண்டாவது நாளாக நிலநடுக்கம்: மக்கள் பீதி

மத்திய அசாமில் திங்கள்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 8:06 am

DIN

மத்திய அசாமில் திங்கள்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடா்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று காலை 11.57 மணியளவில், பிரம்மபுத்ராவின் தெற்குக் கரையில் உள்ள நவ்கான் மாவட்டத்தில் ரிக்டர் அளவுக்கோலில் 3.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்திலும், ஹொஜாய் நகருக்கு அருகில் உள்ள குவஹாத்தியிலிருந்து கிழக்கே 180 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. 

முன்னதாக, நவ்கான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், அதே பகுதியில் ரிக்டர் அளவில் 4 ஆக நிலநடுக்கம் பதிவானது. 

இந்நிலையில், இன்று மீண்டும் அதேபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை. 

நவ்கான் மாவட்டம் மட்டுமன்றி, மேற்கு கா்பி ஆங்லாங், கா்பி ஆங்லாங், கோலாகாட், மோரிகான் மற்றும் சோனித்பூா் ஆகிய மாவட்டங்களிலும் அதிா்வுகள் உணரப்பட்டன. இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனா்.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ள புவிப் பகுதியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. எனவே, இம்மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.