புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திரிபுராவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குப்பதிவு!

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 8:33 am

DIN

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திரிபுரா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தையொட்டிய சா்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மத்தியப் படைகளைச் சோ்ந்த 25,000 பேரும் மாநில காவல் துறை மற்றும் ஆயுதப் படைப் பிரிவைச் சோ்ந்த 31,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

31,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாா்ச் 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.