வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை: வர்த்தக அமைச்சகம்

வெங்காயம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. அதே வேளையில் 2022ல் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் சுமார் 523.8 மில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்கள் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை: வர்த்தக அமைச்சகம்

வெங்காயம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. அதே வேளையில் 2022ல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலங்களில் சுமார் 523.8 மில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்கள் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அதில் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் ஏற்றுமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 டிசம்பரில், வெங்காய ஏற்றுமதி சுமார் 50 சதவீதம் அதிகரித்து 52.1 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான மாதங்களில் ஏற்றுமதி 16.3 சதவீதம் அதிகரித்து 523.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமீபத்திய ட்விட்டர் பக்க பதிவில், இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடை இல்லை என்று பதிவிட்டிருந்தார்.

பிப்ரவரி 25 ஆம் தேதி வெங்காய ஏற்றுமதி குறித்து என்சிபி தலைவர் சுப்ரியா சுலே ட்விட்டர் பதிவவை அடுத்து இந்த அறிப்பு வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com