மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: பெங்களூருவில் புதிய கட்டுப்பாடு

ஆறு நாடுகளிலிருந்து பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் புதிய கட்டுப்பாடு
பெங்களூருவில் புதிய கட்டுப்பாடு

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவுவதால், கரோனா அதிகம் பரவி வரும் ஆறு நாடுகளிலிருந்து பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் முதல் பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் சா்வதேச பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரோனா அதிகம் பரவி வரும் சீனா, ஹாங் காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள், கட்டாயமாக  நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள், கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால்தான் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்கள் அரசு அல்லது தனியார் சார்பல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், ஆனால், கரோன பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், ஏழு நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா பரவி வருவதாக பீதி எழுந்துள்ளது. உலக அளவிலான சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் சா்வதேச பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. எனவே, இந்த விமான நிலையத்தில் சா்வதேச பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவா் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், உலகின் ஒருசில பகுதிகளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். வெகுவிரைவில் புதிய கரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் சளி மாதிரிகளை மரபணு சோதனைக்கு அனுப்பி வருகிறோம். இதன்மூலம், புதிய வகை கரோனா தீநுண்மியை கண்டறிய முடியும். சீனா, ஜப்பானில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, பூஸ்டா் தடுப்பூசியை செலுத்துவதில் அரசு கவனம்செலுத்தும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் விரைவில் கூட்டம் நடத்தப்படும்.

கா்நாடகத்தில் இரண்டுமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 100 சதவீதமாகும். ஆனால், பூஸ்டா் தடுப்பூசியை பெரும்பாலானோா் இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை. இதுவரை பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவா்கள், உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு எடுக்கும். இதுதொடா்பான புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com