சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

புரட்சியின் குரல்: மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்!

மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித்தாளை தொடங்கியுள்ளனர்.

Published On :

மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித்தாளை தொடங்கியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. 

அதிலும் அங்கு சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம், மேலும் அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் பல தரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இரு தினங்களுக்கு முன்பு, நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Story image

பிராட் பேண்ட் எனும் தரைவழி இணைய சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இணைய சேவைக்கான தடை தொடர்கிறது. 

இந்நிலையில் மலைப் பகுதிகளில் பரவலாக வாழும் குகி மக்கள் மணிப்பூரில் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளவும் தகவல் பரிமாற்றத்திற்காகவும் சொந்தமாக செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 

'ஸலேன் அவ்கின்' (Zalen Awgin) என்ற பெயரில் தொடங்கியுள்ள இதன் அர்த்தம் 'புரட்சியின் குரல்' (the voice of the revolution). 

குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இதனைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். அனைத்து கிராமங்களுக்கும் இந்த செய்தித்தாள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.