பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை!
பஞ்சாபில் இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பஞ்சாபில் இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப்படையினர் இன்று(திங்கள்கிழமை) சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஷைத்பூர் கலான் கிராமத்தின் புறநகரில் ட்ரோன் தேடப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபின் டர்ன்-தரண் மாவட்டத்தில் உள்ள ராஜோக் கிராமத்தின் புறநகரில் எல்லைப் பாதுகாப்புப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு ட்ரோன் கைப்பற்றப்பட்டது. ராஜோகே கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் பஞ்சாப் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடுத்தடுத்து பறந்ததால் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...