கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இந்தியா வந்துள்ள இத்தாலியப் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு!

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு முறைப் பயணமாக இன்று காலை இந்தியா வந்துள்ளார். 

News image
Updated On :2 மார்ச் 2023, 7:37 am

DIN

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு முறைப் பயணமாக இன்று காலை இந்தியா வந்துள்ளார். 

இவரை தில்லி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் மெலோனியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அங்கு அவருக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது. 

இத்தாலிய பிரதமருடன் துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தாஜானியும், உயர் அதிகாரம் கொண்ட வணிகக் குழுவும் வந்தனர். 

Story image

தில்லி வரும் மெலோனி பிற்பகலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார். 

இதற்கிடையே தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் இத்தாலி பிரதமர், ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கிறார். மேலும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Story image

மேலும், வருகிற 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும் இந்தியாவின் 8வது ராய்சினா பேச்சுவார்த்தையில் மெலோனி தலைமை விருந்தினராகவும், பேச்சாளராகவும் கலந்துகொள்கிறார். புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தை இதுவாகும். 

இந்தியாவும் இத்தாலியும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.