தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலத்தில் 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

