ஊழல் அரசு முடிவுக்கு வந்துள்ளது: சமாஜ்வாதி தலைவர் 

பாஜகவின் எதிர்மறை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டத் தொடங்கியுள்ளதாக சமாஜவாதி தலைவர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாஜகவின் எதிர்மறை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டத் தொடங்கியுள்ளதாக சமாஜவாதி தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், 

கர்நாடகத்தில் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் நிலவரப்படி தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வகித்து முன்னிலை பெற்று வருகிறது. 

காங்கிரஸ் 135 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

பாஜகவின் எதிர்மறை, வகுப்புவாதம், ஊழல், பணக்காரர்களுக்கு ஆதரவு, பெண்களுக்கு எதிராக மற்றும் இளைஞர்களுக்கு எதிரான சமூகத்தைப் பிளவுபடுத்தும் பிரசாரம் இவை அனைத்திற்கும் முடிவு வந்துவிட்டது. 

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்பட்ட மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கொடுத்த நல்ல தீர்ப்பு தான் இது என்று இந்தியில் அவர் சுட்டுரையில்(டிவிட்டரில்) பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com