ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மிஸோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!

மிஸோரத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலும் சத்தீஸ்கரில் முதற்கட்டத் தேர்தலும் நிறைவடைந்துள்ளன. 

News image

சத்தீஸ்கரில் பக்ஸார் மாவட்டம் ஜகதல்பூரில்...

Updated On :7 நவம்பர் 2023, 2:58 pm

DIN

மிஸோரத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலும் சத்தீஸ்கரில் முதற்கட்டத் தேர்தலும் நிறைவடைந்துள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் நாராயண்பூா், தண்டேவாடா, பிஜபூா், கோன்டா, கேன்கா் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மிஸோரம் தலைநகர் அய்ஸ்வால் வாக்குச்சாவடியில்..

மிஸோரம் தலைநகர் அய்ஸ்வால் வாக்குச்சாவடியில்..

இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதற்கட்டத் தேர்தலில்  70.87 % வாக்குகள் பதிவாகியுள்ளன. 

சத்தீஸ்கரில் பக்ஸார் மாவட்டம் ஜகதல்பூரில்...

சத்தீஸ்கரில் பக்ஸார் மாவட்டம் ஜகதல்பூரில்...

வாக்குப்பதிவுக்கு இடையே சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் இன்று தாக்குதல் நடத்தினர். சிறப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் வீரர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் பக்ஸார் மாவட்டம் ஜகதல்பூரில்...

சத்தீஸ்கரில் பக்ஸார் மாவட்டம் ஜகதல்பூரில்...

அதுபோல, மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. 

மிஸோரத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 77.04% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.