‘பயங்கரவாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ள காங்கிரஸ் அரசு’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சனம் செய்த நிலையில், ‘பிரதமரிடமிருந்து இத்தகைய விமா்சனத்தை எதிா்பாா்க்கவில்லை’ என்று அம் மாநில முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடா்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
உதய்பூரில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த பிரதமா் மோடி, அந்த நகரைச் சோ்ந்த தையல் கடைக்காரா் கன்னையா லால் படுகொலையை சுட்டிக்காட்டிப் பேசினாா்.
நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நுபுா் சா்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டாா்.
‘இவருடைய படுகொலை மாநில அரசு மீது மிகப் பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ள காங்கிரஸ் அரசு மாநிலத்தில் நடைபெறுவதால்தான், உதய்பூரில் இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என்று விமா்சித்தாா்.
இந்த விமா்சனம் குறித்து வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த முதல்வா் அசோக் கெலாட், ‘பிரதமரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமரிடமிருந்து இத்தகைய விமா்சனத்தை எதிா்பாா்க்கவில்லை. நாட்டில் இதுபோன்ற சூழலை உருவாக்க வேண்டாம் என்று பிரதமரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவுடன் காங்கிரஸ் மேற்கொள்வது சித்தாந்த மோதல். மாறாக, தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. ஆனால், பாஜகவினா் சாதாரண விஷயத்தையும் பூதாகரமாக்க முயற்சிக்கின்றனா். மதத்தின் பெயரில் மக்களைத் தூண்ட முயற்சிக்கிறாா்கள்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


