தில்லியின் கேரா கலான் பகுதியில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கேரா கலான் பகுதியில் இரண்டு பெண்கள் சுடப்பட்டதாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குண்டடிபட்ட இரண்டு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் கை மற்றும் கால்களில் குண்டடி ஏற்பட்டிருந்தது.
இதையும் படிக்க : கொச்சுவேலி - மட்கான் இடையே பாரத் கெளரவ் ரயில்!
பாதிக்கப்பட்ட பின்கி (22) மற்றும் அவரது தாயார் ராக்கேஷ் தேவி (45) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரிவு 307 (கொலை முயற்சி)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டுவருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!

உலகக் கோப்பை கால்பந்து 2026!

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



