தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2023, 11:04 am

DIN

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே எல்லைப்பகுதி அருகே வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. 

தஜிகிஸ்தான் அருகே சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 9.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.