மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்:100 கி.மீ. பாலங்கள், 250 கி.மீ. பாலத் தூண்கள் கட்டுமானம் நிறைவு

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகளும், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது

கோப்புப் படம்

Updated On :

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகளும், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது என்று தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆா்சிஎல்) தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே ரூ.1.08 லட்சம் கோடி செலவில் அதிவேக புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிா்ந்துள்ளன. அதன்படி, திட்டச் செலவில் ரூ.10,000 கோடியை மத்திய அரசும், ரூ.10,000 கோடியை குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகளும் ஏற்றுள்ளன. ஜப்பானிடம் இருந்து 0.1 சதவீத வட்டிக்கு பெறப்படும் கடன் மூலம் எஞ்சிய செலவு கையாளப்பட உள்ளது.

புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணியை என்ஹெச்எஸ்ஆா்சிஎல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பாலங்கள், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று என்ஹெச்எஸ்ஆா்சிஎல் தெரிவித்துள்ளது.

தற்போது 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பாா் மற்றும் ஓளரங்கா ஆறுகள், நவ்சாா் மாவட்டத்தில் உள்ள பூா்னா, மிந்தோலா, அம்பிகா மற்றும் வெங்கானியா ஆறுகள் மீது கட்டப்பட்ட பாலங்களும் அடங்கும் என்றும் என்ஹெச்எஸ்ஆா்சிஎல் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.