உறுப்பினர்கள் அமளி: எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

அவைத் தலைவரும் ஆளும் கட்சியும் அரசியலமைப்பு எதிராகச் செயல்படுவதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கச் சட்டப்பேரவை தலைவர் பீமன் பானர்ஜி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தைத் தெரிவித்த காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்குத் தடை விதித்துள்ளார், அவைத் தலைவர்.

இந்தக் குளிர் காலக் கூட்டத்தொடர் முழுமைக்கும் சுவேந்து அதிகாரி சட்டப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள இயலாது.

இந்த நிகழ்வு ‘அரசியலமைப்பு நாள்’ குறித்த விவாதத்தில் நடந்தது.

விதி 169 குறித்த தீர்மானம் விவாதிக்கப்பட்டபோது அரசியலமைப்பு எவ்வாறு ஆபத்துக்குள்ளாகிறது என்பது குறித்து பேசப்பட்டது.

இதில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கோஷ், பாஜகவால் கைவிடப்பட்டவர்கள் எப்படி இன்னும் பதவி விலகாமல் தொடர்கிறார்கள் எனப் பேசினார்.

அவைத்தலைவர் இந்தப் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கச் சொல்லி வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

அதன் பிறகு திரிணாமூல் உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியின் செயலுக்கு ஆட்சேபனை தெரிவித்து அவரை இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை எழுப்பினார், இதனை அவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

அவைத் தலைவரும் ஆளும் கட்சியும் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படுவதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com