ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வருகிற நவம்பர் இரண்டாம் வாரம் - டிசம்பர் முதல் வாரத்துக்கு இடையே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநிலத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.
அதன்படி, இன்னும் ஒரு சில நாள்களில் அதாவது அக்டோபர் 8 முதல் 10 ஆம் தேதிக்குள் 5 மாநிலத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
அதுபோல, 5 மாநிலங்களுக்கும் நவம்பர் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
கடந்த 2018ல் நடந்தது போலவே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
மிசோரம் மாநில சட்டப்பேரவைக் காலம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதியும் மற்ற 4 மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்திலும் முடிவடைகிறது.
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன.
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இந்த 5 மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!

தவெக, தவெக... என பள்ளி மாணவர்கள் கோஷம்! விடியோவால் மீண்டும் சர்ச்சை!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



