டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை அதிகரிப்பு!

பயணிகள் வாகனம்
பயணிகள் வாகனம்

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது மார்ச் மாதத்தில் 2 சதவிகிதம் அதிகரித்து 90,822 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 89,351-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் மின்சார வாகனங்கள் உள்பட பயணிகள் வாகனங்களின் விற்பனை மார்ச் மாதத்தில் 50,297 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 44,225 ஆக இருந்தது. இது சுமார் 14 சதவிகிதம் வளர்ச்சியாகும்.

உள்நாட்டு சந்தையில் மொத்த வணிக வாகன விநியோகம் கடந்த மாதம் 40,712 யூனிட்களாக இருந்த நிலையில், இது மார்ச் 2023ல் 45,307 யூனிட்களாக இருந்தது. மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில், உள்நாட்டு சந்தையில் அதன் மொத்த விற்பனை 9,49,015 யூனிட்களாக உள்ளது. இது 2022-23ஆம் ஆண்டில் 9,31,957 யூனிட் விற்பனையிலிருந்து 2 சதவிகிதம் அதிகரிப்பு.

கடந்த நிதியாண்டில், பயணிகள் வாகன மொத்த விற்பனை 5,41,087 யூனிட்டுகளிலிருந்து 6 சதவிகிதம் அதிகரித்து 5,73,495 யூனிட்களாக இருந்தது. அதே வேளையில் உள்நாட்டு சந்தையில் வர்த்தக வாகன ஏற்றுமதி 3,93,317 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவிகிதம் குறைந்து 3,78,060 ஆக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், 2024ல் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மொத்த விற்பனை 5,73,495 யூனிட்களாகவும் விற்று சாதித்த நிலையில், சில்லறை விற்பனையில் 2023ல் அது 10 சதவிகிதம் அதிகரித்தது. அதே வேளையில் சிஎன்ஜி மற்றும் ஈவி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் ஒட்டுமொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 29 சதவிகித பங்களிப்புடன் ஆரோக்கியமான வளர்ச்சி பதிவு செய்தது.

இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 2024ல் 42 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையாகி சாதனை படைக்கும் என்று சந்திரா தெரிவித்துள்ள நிலையில், எஸ்யூவி விற்பனையின் வலுவான வளர்ச்சியால் ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவிகிதத்தையும் அதே வேளையில் 2023ல் 43 சதவிகிதத்தையும் இது பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னோக்கிச் செல்லும்போது, பயணிகள் கார்களுக்கான தேவை வலுவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் சந்திரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com