ஏப். 5-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: கே.சி. வேணுகோபால்

ஏப். 5-ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மேகாலயா: அதிரடி திட்டங்களுடன் வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மேகாலயா: அதிரடி திட்டங்களுடன் வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

நாடு முழுவதிலுமிருக்கும் மக்களிடையே நன்கு கலந்துரையாடிய பிறகு, ஏப்ரல் 5ஆம் தேதி காங்கிர* கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவிருக்கிறது என்று கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, காங்கிரஸ் கட்சி, தேர்தலை முன்னிட்டு, தொலைநோக்கு அறிக்கையை, நாடுமுழுவதிலுமிருக்கும் மக்களிடையே கலந்துரையாடிய பிறகு தயாரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வரும் 5ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படவிருக்கிறது.

அதுபோல, ஏப்ரல் 6ஆம் தேதி ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத்தில் மெகா பேரணியு நடத்தப்படவிருக்கிறது.

ஜெய்ப்பூரில் நடைபெறும் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் நிர்வாகி சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை எடுத்துச் சொல்லி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி தலைமையேற்கிறார்.

எங்களது நோக்கம், எப்போதும் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே அமையும், நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே, காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வை அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com