‘முட்டாள்தனமான முயற்சி’: அருணாசல் விவகாரத்தில் வெளியுறவுத் துறை அறிக்கை!

அருணாசல் பிரதேசத்தின் 30 பகுதிகளுக்கு பெயர் மாற்றி சீன அரசு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
‘முட்டாள்தனமான முயற்சி’: அருணாசல் விவகாரத்தில் வெளியுறவுத் துறை அறிக்கை!

அருணாசல பிரதேசத்தின் 30 பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அருணாசல பிரேதசத்தை தொடா்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அம் மாநிலத்துக்கு ‘ஷாங்னான்’ என்று பெயரிட்டுள்ளது. தெற்கு திபெத்தின் அங்கமான ஷாங்னான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அருணாசலில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு 30 புதிய பெயா்களைக் கொண்ட 4-ஆவது பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது.

ஏற்கெனவே 2017, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் மூன்று கட்டமாக அருணாசல் பிரதேச பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றி வெளியிட்டிருந்தது.

‘முட்டாள்தனமான முயற்சி’: அருணாசல் விவகாரத்தில் வெளியுறவுத் துறை அறிக்கை!
அருணாசல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு மேலும் 30 பெயா்களை வெளியிட்ட சீனா

சீனாவின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய மாநிலமான அருணாசல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்துள்ளது முட்டாள்தனமான முயற்சி. இதுபோன்ற முயற்சிகளை இந்திய அரசு எதிர்க்கிறது.

பெயர் மாற்றி அறிவிப்பதன் மூலம் இந்தியாவின் அங்கம் அருணாசல் பிரதேசம் என்பதை மாற்றிவிட முடியாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “உங்களுடைய வீட்டுக்கு நான் பெயரை மாற்றுவதன் மூலம், அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாசல பிரதேசம் இந்திய மாநிலம். எதிா்காலத்திலும் அது இந்திய மாநிலம்தான். அந்த மாநிலத்திலுள்ள இடங்களுக்கு பெயா்களை மாற்றுவதன் மூலம் எதுவும் நடந்துவிடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com