சஞ்சய் சிங் போல... கேஜரிவால், சோரனுக்கு நீதி கிடைக்கும்!

உலகம் முழுவதும் பாஜகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியதைப் போல தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் நீதி கிடைக்கும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதனை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் கலால் துறை அமைச்சரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. சஞ்சய் சிங் வழக்கில் பணம் எதுவும் கைப்பற்றாத நிலையில், 6 மாதங்களாக அவரை சிறையில் வைத்திருந்ததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது குறித்து உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், சஞ்சய் சிங்குக்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இதேபோன்று அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஹேமந்த் சோரனுக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறோம். ஒரு மாநில மக்கள் தேர்வு செய்த முதல்வரை குற்றவாளி என வீண் பழி சுமத்தி பாஜக சிறையில் அடைக்கிறது. இது உலகம் முழுவதும் பாஜகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com