உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்!

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய செல்வந்தர்கள்: இவர்களின் சொத்து மதிப்பு தெரியுமா?
மாதிரி படம்
மாதிரி படம்dotcom
Published on
Updated on
1 min read

அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களுக்கு நெருக்கமானது.

கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 116 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 8.7 லட்சம் கோடி) சொத்து மதிப்போடு இந்திய/ ஆசியளவில் முதலிடத்தில் உள்ளார்.

உலகளவில் 9-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட பட்டியலில் அம்பானி இந்தாண்டு இணைகிறார். கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி / கெளதம் அதானி (கோப்புப் படங்கள்)
முகேஷ் அம்பானி / கெளதம் அதானி (கோப்புப் படங்கள்)

அதற்கு அடுத்த இடத்தில் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார். உலகளவில் 17-வது இடத்தில் இவர் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 84 பில்லியன் அமெரிக்க டாலர்.

சாவித்திரி ஜிண்டால் இந்தியாவின் அதிக சொத்துள்ள பெண்ணாக திகழ்கிறார். இவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர்.

25 இந்தியர்கள் புதிதாக பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முன்னர் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்ட்ரி இந்தாண்டு பட்டியலில் இடம்பெற்றவில்லை.

முதல் 10 இடத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பைப் பார்ப்போம்.

  1. முகேஷ் அம்பானி - ரூ. 8.7 லட்சம் கோடி

  2. கெளதம் அதானி - ரூ. 6.3 லட்சம் கோடி

  3. ஷிவ் நாடார் - ரூ. 2.7 லட்சம் கோடி

  4. சாவித்திரி ஜிண்டால் - ரூ.2.5 லட்சம் கோடி

  5. திலிப் ஷாங்வி - ரூ.2 லட்சம் கோடி

  6. சைரஸ் பூனாவாலா -ரூ. 1.6 லட்சம் கோடி

  7. குஷல் பால் சிங் -ரூ. 1.56 லட்சம் கோடி

  8. குமார் பிர்லா -ரூ. 1.4 லட்சம் கோடி

  9. ராதாகிஷன் தமானி -ரூ.1.3 லட்சம் கோடி

  10. லக்‌ஷ்மி மிட்டல் -ரூ.1.2 லட்சம் கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com