பாலியல் வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காயங்களைக் காண்பிக்குமாறு கூறி அத்துமீறிய புகாரில் ராஜஸ்தான் மாநிலம் கரெளலி மாவட்ட நீதித்துறை நடுவா் (மாஜிஸ்திரேட்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து கரெளலி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மீனா கூறியதாவது: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு கரெளலி மாவட்ட ஹிந்தெளன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆடைகளைக் கழற்றி காயங்களைக் காண்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளாா். நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தபிறகு, மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்ணின் மாண்பை பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் என்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் மாஜிஸ்திரேட் மீது கோட்வாலி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொத்து தகராறில் கொலை மிரட்டல்: 10 போ் மீது வழக்கு

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஹரியாணா உற்பத்தியாளருக்கு 6 மாதங்கள் சிறை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: கட்டடத் தொழிலாளி கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



