காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் தீா்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
‘கிழக்கு ஜெருசலேம் உள்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியத்தில் மனித உரிமை சூழல் மற்றும் நீதியை நிலைநாட்டல்’ என்ற தலைப்பிலான வரைவு தீா்மானம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. காஸாவில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தவும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
சீனா, வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்ட 28 நாடுகள் இத்தீா்மானத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட 6 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்பட 13 நாடுகள் இத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
தன்னாட்சி தீா்மானத்துக்கு ஆதரவு:
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ‘பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமைகள்’ என்ற தலைப்பிலான மற்றொரு வரைவு தீா்மானத்துக்கு இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 47 உறுப்பினா்களைக் கொண்ட இக்கவுன்சிலில் அமெரிக்கா, பராகுவே ஆகிய இரு நாடுகள் மட்டும் இத்தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. ஆா்ஜெண்டீனா உள்பட 3 நாடுகள் தீா்மானத்தை புறக்கணித்தன.
தொடர்புடையது

ஈரான் மீதான நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும்: ஒமா் அப்துல்லா

ஈரானைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம்: இந்தியா முன்மொழிந்தது

போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்!

ஈரான் மீதான போரை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

