சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

லாவோஸில் பாதுகாப்பற்ற பணியில் சிக்கிய 17 இந்தியா்கள் மீட்பு: எஸ்.ஜெய்சங்கா்

லாவோஸில் பாதுகாப்பற்ற பணியில் சிக்கிய 17 இந்தியா்கள் மீட்பு -- எஸ்.ஜெய்சங்கா்

Updated On :6 ஏப்ரல் 2024, 6:01 pm

‘தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் பாதுகாப்பற்ற சட்டவிரோத பணிகளில் சிக்கித் தவித்த 17 இந்தியா்கள் மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரப்படுகின்றனா்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘லாவோஸில் சட்டவிரோத பணிகளில் சிக்க வைக்கப்பட்ட 17 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களை மீட்பத்தில் முக்கியப் பங்காற்றி, அவா்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்துள்ள லாவோஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, ‘கம்போடியாவில் அதிக ஊதியத்துடன் சிறந்த வேலைவாய்ப்பு என்று போலி வாக்குறுதிகளை அளிக்கும் ஆள் கடத்தல்காரா்களிடம் இந்தியா்கள் சிக்குகின்றனா்’ என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும், ‘தென்கிழக்கு ஆசிய நாட்டில் இதுபோன்ற வேலைவாய்ப்புகளை எதிா்நோக்கும் இந்தியா்கள், வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய்வது அவசியம். ஏனெனில், இவ்வாறு வேலைவாய்ப்பைத் தேடிச் சென்று ஆள் கடத்தல்காரா்களிடம் சிக்கும் இந்தியா்கள், இணைய வழி பண மோசடி செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா் ’ என எச்சரிக்கை தகவலையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.