காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஜம்மு - காஷ்மீரில் ’இந்தியா’ கூட்டணியில் காங். 3 இடங்களில் போட்டி

ஜம்மு - காஷ்மீரில் ’இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

News image

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லாவுடன் காங். தலைவர் சல்மான் குர்ஷித் - படம் | பிடிஐ

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm IST

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இவ்விரு கட்சிகளும் தலா 3 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

ஜம்மு, லடாக், உதாம்பூர் மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர், ஆனந்த்நாக், பாராமுல்லா மக்களவை தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் ஏப்.19 தொடங்கி 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, அக்கூட்டணியிலிருந்து விலகுவதாய் கடந்த சில நாள்களுக்கு முன், அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அக்கட்சி ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிடப் போவதாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக முன்னணி ஆஸாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத்தும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் ஜம்மு காஷ்மீரில் போட்டி கடுமையாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.